சென்னை ஜூன் 26: பண்ருட்டியில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலில் மழை வேண்டிய அதிமுக எமிஎல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் வருண ஜெப யாகம் நடைபெற்றது.  மழை வேண்டி பண்ருட்டி வீரட்டானேஸ்வர்ருக்கு பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் ஓதுவார்கள் சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமறை மற்றும் திருஞானசம்பந்தர் இயற்றிய 12-ம் திருமுறையில் தேவார மழைப்பதிகத்தை மேகரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி இறைவனை வேண்டினர்.

இந்நிகழ்ச்சிகளுக்கு பண்ருட்டி அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பண்ருட்டி முன்னால் நகர மன்ற தலைவர் ம.ப.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.  கழக மாவட்ட பொருளாளர் ஆர்.வி.ஜானகிராமன், பண்ருட்டி அவைத்தலைவர் ராஜதுரை, நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சௌந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.