திருச்சி, ஜூன் 26: திருச்சி முக்கொம்பு மேலணையில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து நீர் அளவிடும் கருவிகளை பார்வையிட்டனர்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் பொருத்தப்பட்டுள்ள நீர் அளவிடும் கருவிகளை மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்து பார்வையிட்டனர்.

இந்த ஆய்வு குழுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகளுடன் காவிரி நீரை பங்கிட்டு கொள்ளும் மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து பொதுப்பணித்துறையின் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் நிலையிலான தலா 2 அதிகாரிகள் இடம் பெற்று உள்ளனர். அடுத்து இந்த குழுவினர் கல்லணையில் ஆய்வு செய்து விட்டு காரைக்கால் செல் கிறார்கள் இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.