சென்னை, ஜூன் 26: தூத்துக்குடியை சேர்ந்தவர் நவ்ஷத் அலி (வயது 32). இவர், சென்னை அண்ணாநகர் மேற்கு திருமங்கலத்தில் அறை எடுத்து தங்கி, அங்குள்ள நகை கடை ஒன்றில் கடந்த 10 வருடங்களாக வேலை பார்த்துவந்துள்ளார்.

நேற்றிரவு வேலை முடிந்து அறைக்கு திரும்பியுள்ளார். செல்போன் பேசியபடியே நடந்துச்சென்றுக்கொண்டிருக்கையில், பைக்கில் வந்த மர்மநபர் செல்போனை பறித்து கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரித்ததில், கொரட்டூரை சேர்ந்த புருஷோத்தம்மன் (வயது 22) என்பது தெரியவந்தது.