தாம்பரம்,ஜூன் 26: தாம்பரம் அருகே பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 50 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளைபோலீசார் தேடி வருகின்றனர். சென்னை கிழக்கு தாம்பரம், சுதானந்த பாரதி தெருவில் அடகு கடை நடத்திவருபவர் வீரேந்திர ஜெயின். இவரது மனைவி உறவினர் திருமணத்திற்கு ஹைதராபாத் சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த வீரேந்திரஜெயின் வங்கிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிஉள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. இதைபார்த்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்,  அவரது புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை செய்தனர்.

சோதனையில் பதிவான கைரேகைகளை கொண்டு சோதனை நடத்தினர்.பின்னர் அதில் பதிவாகியிருந்த அடையாளங்களை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர், மேலும் கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளதா என்று சேலையூர் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர், பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.