சென்னை, ஜூன் 26: 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி கூறியிருப்பதாவது:-

சென்னை நகர கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூடுதல் இயக்குனர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று காவல்துறை இயக்கக கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜி.வெங்கட்ராமன் ஐஜி கூடுதல் இயக்குனர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று சைபர் குற்றப்பிரிவு கூடுதல் இயக்குனராக புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஜி வினிதேவ் வான்கடேவ் கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று மாநில குற்ற பதிவுகள் பிரிவின் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பயிற்சி பிரிவு இயக்குனர் ஜெனரலாக கரண்சின்ஹா நியமிக்கப் பட்டுள்ளார்.
டிஐஜி செந்தில்குமார் ஐஜியாக பதவி உயர்வு பெற்று சேலம் நகர கமிஷனராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

கே.சங்கர் சென்னை சிபிசிஐடி ஐஜியாக பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை காவல்துறை நவீனமாக்குதல் பிரிவு ஐஜியாக சி.ஸ்ரீதர் நியமனம்.

பிரேம் ஆனந்த் சின்ஹா ஐஜியாக பதவி உயர்வு ஏற்பட்டு சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) கூடுதல் கமிஷனராக நியமனம்.

வி.வனிதா ஐஜியாக பதவி உயர்வு பெற்று ரெயில்வே பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
நஜ்மல் ஹோடா ஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமனம்.

டி.எஸ். அன்பு ஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னையில் நிர்வாக பிரிவு ஐஜியாக நியமனம்.

மகேந்தர் குமார் ரத்தோடு ஐஜியாக பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஐஜியாக நியமனம்.

ஐஜி சி.ஈஸ்வரமூர்த்தி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமனம்.
பிரிவீண்குமார் அபிநபு டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி சரக காவல்துறையில் நியமனம்.

ஆர்.சுதாகர் சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக (கிழக்கு) நியமனம். எம்.பி. ஜெயாகௌரி சென்னை போக்குவரத்து இணை ஆணையராக நியமனம்.