சென்னை, ஜூன் 26: தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய யாரும் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர். சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவிற்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.கொள்கை, கோட்பாடு, லட்சியம் என மூன்றும் இல்லாத தினகரனுக்கு மூன்று நாமம்தான் கிடைக்கும்.
தங்க தமிழ்ச்செல்வனை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்!. தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய யாரும் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டார்கள் என கூறினார்.