மான்செஸ்டர், ஜூன் 27: உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. பலம்வாய்ந்த இந்திய அணியுடன் வெ.இண்டீஸ் அணி மோதும் இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடிவருகிறது. அதிகபட்ச ஸ்கோரை நிர்ணயித்தால் மட்டுமே இந்தியாவின் வெற்றி பயணம் தொடர எளிதாக இருக்கும் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்து.