சென்னை, ஜூன் 27:  மடுவங்கரையை சேர்ந்த பள்ளி மாணவன் பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தவேளையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிண்டி மடுவங்கரையை சேர்ந்தவர் ரிஷான் (வயது 14). புழுதிவாக்கத்தில் உள்ள தனியா£ர் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தான், இன்று காலை வழக்கம்போல் எழுந்த ரிஷான் சிறிதுநேரம் செல்போனில் நேரம் செலவிட்டுள்ளான். ரிஷான் எழுந்துவிட்டதை கண்ட அவனது தாய் அவனுக்கு காபி போட்டுவருவதற்காக கிச்சன் சென்றுவிட்டு வந்து பார்க்கும்போது, வீட்டிற்கு வெளியே உள்ள மாடி படிக்கட்டுகளின் அடியில் உள்ள கொக்கியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளான்.

அதிர்ந்துபோன அவனது தாய், செய்வதறியாது கதறி அழுதுள்ளார். தகவலறிந்துவந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து, கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.