பர்மிங்காம், ஜூன் 27: எந்த இடத்தில் இந்திய அணிக்கு பந்துவீசினால் விக்கெட்டுகளை வீழ்த்தமுடியும் என்று எங்களுக்கு தெரியும் என்று வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உலக கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் இந்திய அணியும் ஒன்றாக உள்ளது. எனவே, இந்திய அணியை வீழ்த்துவது கொஞ்சம் கடினம்தான். இருப்பினும், இந்திய அணியை வீழ்த்தும் திறமை வங்கதேச அணிக்கு உள்ளது.

இந்திய அணியை வீழ்த்த சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம். மற்ற அணிகளுடன் இந்திய அணி விளையாடும் போது அவர்களின் ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்து உள்ளோம். இதனால் எந்த இடத்தில் இந்திய அணிக்கு பந்து வீச வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என அவர் கூறினார்.