தமிழர் சிவகுமாரை மத்திய அரசு நியமித்தது

சென்னை

சென்னை, ஜூன் 27: தமிழகத்தின் முண்ணனி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வரும் முத்தாரம்மன் குரூப் நிறுவன தலைவர் டாக்டர் சிவகுமார் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒடிசா மத்திய கிடங்குகள் கார்பேரேஷன் மேலாண் இயக்குநராக நியமிக்கபட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஒருவரை ஒடிசா மாநிலத்தின மத்திய கிடங்குகள் கார்பரேஷன் மேலாண் இயக்குராக நியமித்து இதுவே முதல்முறையாகும். தமிழகத தில் இளம் தொழில் முனைவரோக தனது வாழ்க்கையை தொடங்கிய டாக்டர் பி சிவகுமார் முத்தாரம்மன் குருப் நிறுவனத்தை தொடங்கி,வணிகம ,சந்தை ,பால் மணல் உள்ளிட ட 14துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இருபது ஆண்டு கால தொழிதுறை அனுபவம் கொண்ட டாக்டர் சிவகுமார ஆண்டிற்கு 200கோடி ரூபாய் வர்த்தகம புரிந்து வருகிறார் குறிப்பிடதக்கது.  இவரது நிறுவனத்தில் 400க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும ஆயிரத்திற்கு மேற்பட்டோர்க்கு மறைமுக வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.

இவரது தொழிற்துறை அனுபவம். செறிவான லாபமுறை ,ஆகியவற்றினை கண்டு ஒடிசா மாநிலத்தில் இயங்கும் மத்திய அரசு கிடங்குகள் கார்பரேஷ்ன் மேலாண் இயக்குநராக நியமித்து உள்ளது. இவரது பதவி காலம் 2021 வரை இருக்குமென நியமன குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.