சென்னை, ஜூன் 27: 12 வயது சிறுவனுக்கு குளோபல் ஹெல்த் சிட்டியில் அரிதான முதுகுத்தண்டுவட குறைபாட்டிற்காக வெற்றிகரமான 11 மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சைக்கு பின் சிறுவன் இயல்பு நிலையை அடைந்தான்.

முதுகு தண்டுவடத்தில் ஒரு இணைப்புத்தண்டு உருவாவதை விளைவிக்கின்ற லிபோமைலோ மெனிங்கோசைலோ என்று அழைக்கப்படும் பாதிப்பு இருப்பதாக தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு கண்டறியப்பட்டது. இந்த அரிதான முதுகுத்தண்டுவட கோளாறானது இணைக்கப்பட்ட தண்டு நோய்க்குறியை அவனுக்கு விளைவித்திருந்தது.

இதனால¢ தண்டுவட கால்வாயின் கீழ்ப்பகுதியில் தண்டுவட நரம்புகள் ஒட்டிக் கொள்கின்றன. குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ச்சியடையும் போது இது தண்டுவடத்தில் உராய்வை விளைவிக்கிறது மற்றும் இதன் காரணமாக தண்டுவடம் வளர்ச்சியடையும் திறனானது குறைகிறது. கிளெனீகிள்ஸ் குளோபல் சிட்டியைச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை இருநிலைகளில் 11 மணிநேரத்தில் மேற்கொண்டனர்.

முதல் நிலையில் வளர்ந்திருந்த பெருந்திரள் திசுவை குறைத்து இதன் மூலம் தண்டுவடத்தை விடுவிப்பது மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது நிலையில், கருவிகள் பொருத்தப்பட்ட இணைவின் வழியாக உடலுறுப்பு திரிபு சரி செய்யப்பட்டது.

இது குறித்து டாக்டர்கள் நிஜெல், பானிகிரண் பேசிய போது, இரண்டாவது அறுவை சிகிச்சையை தவிர்ப்பதற்காக ஒற்றை நிலையில் இரு கட்டங்களாக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள நாங்கள் முடிவெடுத்தோம். குறைவான அளவு ரத்த இழப்பு, வேகமாக மீண்டெழுதல், தொற்று மற்றும் காயம் ஆறுவதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு குறைவான இடர்வாய்ப்பு ஆகிய அனுகூலங்களே இதற்கு காரணம் என்று கூறினர்.