சென்னை, ஜூன் 27: புற்றுநோய் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நாளை வரை சென்னையில் உள்ள பேட்டர்சன் கேன்சர் சென்டரில் நடைபெறும்.  விரிவான புற்றுநோய் சிகிச்சை மையமாக விளங்கும் பேட்டர்சன் புற்றுநோய் மையம் மற்றும் புற்றுநோய் ஒழிப்பு அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக உடல் சார்ந்த் விசாரணைகளும் தேவைப்படுவோருக்கு ரத்த யூரியா, சீரம் கிரியேட்டினின், ரத்த சர்க்கரை அளவு, ஈசிஜி எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் மற்றும் பேப் ஸ்மியர் உள்ளிட்ட பரிசோதனைகளும் அதற்கான கைதேர்ந்த மருத்துவர்கள் மூலம் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி ஜூன் 19 முதல் 28-ந் தேதி வரை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை பேட்டர்சன் கேன்சர் சென்டரில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு, 044-24724232, 91 9962577181.