சண்டிகர், ஜூன் 27: அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள விகாஸ் சதுர்வேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் நகரில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக உள்ள விகாஸ் சதுர்வேதி உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு, காரில் ஏறிய போது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த விகாஸ் சதுர்வேதியை அவரது உதவியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

விகாஸ் சதுர்வேதியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை அடிப்படியாக கொண்டு போலீசார் கொலையாளிகளை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.