சில நிமிடங்களில் தீர்ந்த தீபாவளி ரெயில் டிக்கெட்

சென்னை

சென்னை, ஜூன் 27: தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்வதற்கான ரெயில்வே டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர்.

ஆனால் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. பல முக்கிய ரெயில்களில் காத்திருப்பு பட்டியலில் கூட முன் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.