சென்னை, ஜூன் 27: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 11 பேரையும், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களின் விவரங்கள்: கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய திருவொற்றியூரை சேர்ந்த மகேஷ் (வயது 36), பெரும்பாக்கத்தை சேர்ந்த சிவா (வயது 37), திரிசூலத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 25) , திருட்டு வழக்கில் தொடர்புடைய மதுரவாயலை சேர்ந்த முருகன் (வயது 27). கொலை வழக்கில் தொடர்புடைய தண்டையார் பேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 31), திருநீர்மலை (வயது 38), பெருங்களத்தூரை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 31), மீஞ்சூரை சேர்ந்த தமிழரசன், பசுபதி, பால சரத்குமார் (வயது 29).

வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அசோக் (வயது 25) ஆகிய 11 பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.