திருச்சி, ஜூன் 27: திருச்சி மாவட்டம் பெரமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் கோகிலா (வயது 25). இவர் மண்ணச்சநல்லூரில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
பூனாம் பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (வயது24). இவர அதே பகுதியில் தையல் கடை வைத்திருந்தார்.

அப்போது இரு வருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்களது காதல் விஷயத்தை பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி கோகிலா, தனது பெற்றோரிடம் திருச்சியில் நடக்கும் திருமணத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் திருச்சியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் காதலருடன் திருமணம்செய்து கொண்டராம்.

பின்னர் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமே என்று கோகிலா மன முடைந்து காணப் பட்டாராம். இந்தநிலையில் நேற்று முன்தினம் மோகன் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து ள்ளார். அப்போது வீட்டில் கோகிலா மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகரன் விரைந்து சென்று விசாரணை நடத்தி னார். பின்னர், கோகிலா உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.