ஆடை பட சர்ச்சை அமலா பாலுக்கு பதில் மேகா ஆகாஷ்

சினிமா

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 33-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருந்த அமலா பாலிற்கு பதிலாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கிய எஸ்பி ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்.

இவர், இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள படம் விஜய் சேதுபதியின் 33-வது படம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட் செலவில் பிரமாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார்.

இப்படத்தில், விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இவருக்கு வில்லனாக போலீஸ் கதாபாத்திரத்தில் மகிழ் திருமேனி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆடை படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் அமலா பாலிற்கு பதிலாக வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தின் புகழ் மேகா ஆகாஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஊட்டியில் நடக்க இருக்கும் படப்பிடிப்பில் மேகா ஆகாஷ் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.