பெங்களூரு, ஏப்.10:மறைந்த முன்னாள் எம்பியும், நடிகருமான அம்பரீஷின் மனைவி சுமலதாவுக்கு பிஜேபி ஆதரவு தெரிவித்துள்ளது.கர்நாடக திரைவானில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகர் அம்பரீஷ். இவர் மாண்டியா தொகுதியிலிருந்து 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடக மாநில அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த நவம்பரில் அவர் மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து மாண்டியா தொகுதியில் அவருடைய மனைவி சுமலதா போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு சீட் கொடுக்கவில்லை. அந்த தொகுதி தங்களுக்கு வேண்டு மென்று மஜக கேட்டது. அந்த தொகு தியில் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சுமலதா சுயேச்சை யாக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பிஜேபி வேட்பாளரை நிறுத் தவில்லை. அதுமட்டுமின்றி அவரு டைய வெற்றிக்காக பிஜேபி தொண் டர்கள் உழைப்பார்கள் என்று பிரதமர் மோடி மைசூரில் நடந்த பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.