கராச்சி, ஜூன் 28: பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல இந்தியா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இணையத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு முன்னேற இந்திய அணி உதவி செய்ய வேண்டும். அது எப்படி என்கிறீர்களா? இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் லீக் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்தால் அந்த அணி வெளியேறி விடும். பாகிஸ்தான் அணி எஞ்சிய இரு லீக்கிலும் (ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் எதிராக) வெற்றி பெற்றால் அரைஇறுதியில் மீண்டும் இந்தியாவை சந்திக்க வாய்ப்பு உருவாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எஞ்சிய இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி வென்றாலும், இங்கிலாந்தை வெளியேற்றி இந்தியா உதவிசெய்யும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது சோயிப்பின் விருப்பம்.