செஸ்டர் லீ ஸ்டிரீட், ஜூன் 28:  ரபாடாவின் அபார பந்துவீச்சில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே அடித்த பந்தை தென்னாப்பிரிக்கா கேப்டன் டூ பிளெசிஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் ஆட்டம் செஸ்டர் லீ ஸ்டிரீட்டில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இலங்கை-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில், டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதல் பேட்டிங் செய்துவருகிறது. முதல் ஓவரின் முதல் பந்தை தென்னாப்பிரிக்க இளம் பவுலர் ரபாடா வீச, இலங்கை கேப்டன் திமுத் ரத்னே அடித்த பந்தை, தென்னாப்பிரிக்கா கேப்டன் டூ பிளெசிஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே இலங்கை கேப்டன் டக்-அவுட்டானது, அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.