வேலூர்,ஜூன் 28: வேலூர் சத்துவாச்சாரியில் வட்டாரபோக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஓட்டுனர் உரிமம், வாகன உரிமம் பெறுவதற்கும், வாகனங்கள் புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், வாகன உரிமையாளர்களின் பெயர் மாற்றம் செய்வதற்கு என நூற்றுக் கணக்கானவர்கள் வருகிறார்கள்.

அப்போது அவர்களுக்கு உடனடியாக பணியை முடித்துக்கொடுப்பதற்கு புரோக்கர்கள் மூலம், அதிகாரிகளுக்கு லஞ்சம் பெற்றுக்கொடுப்பதாக புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பிடிக்க லஞ்சஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.
நேற்று வழக்கம்போல வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கும், ஓட்டுனர் உரிமம்பெற விண்ணப்பிக்கவும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

வாகனங்களுக்கு புதிய பதிவெண் வாங்குவது உள்பட பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் அலுவலக வளாகத்தில் திரண்டிருந்தனர்.
இந்த நிலையில் காலை 11 மணியளவில் லஞ்சஒழிப்பு துணைபோலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்தனர். உடனடியாக அவர்கள் அங்கு இருந்த பொதுமக்களை அலுவலக வளாகத்தைவிட்டு வெளியே அனுப்பி விட்டு அலுவலக நுழைவுவாயிலை பூட்டிவிட்டனர்.

அப்போது கழிவறை, படிக்கட்டுக்கு அடிப்பகுதி, ஆவணங்கள் வைப்பறை, அதிகாரிகளின் மேசைகள் ஆகியவற்றில் கட்டுக்கட்டாக பணங்கள் இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி அதற்கான கணக்குகளை சரிபார்த்தனர். அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 780 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை
லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.