ஒசாகா, ஜூன் 28: பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில், ஜி-20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் ஒசாகா புறப்பட்டு சென்றார்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் உடன் இருந்தார். இந்த முத்தரப்பு சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.