சென்னை, ஜூன் 28: சோழிங்கநல்லூர் அருகே லாரி டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்பளம்போல் நொறுங்கியதுடன், கார் டிரைவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

சோழிங்கநல்லூர் சிக்னல் நோக்கி நள்ளிரவு 12.30 மணியளவில், லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது திடீரென லாரி டயர் வெடித்தது, இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கண்மூடித்தனமாக ஓடி, அங்கு சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த 5-க்கும் மேற்பட்ட கார்களில் மோதி உள்ளது.

இதில், கார் டிரைவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.