விழுப்புரம் ஜூன் 28 விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை பகுதியில் அனுமதியின்றி கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது தாழ்மதூர் கிராமத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது தாழ் மதூர் கிராமத்தைச் சேர்ந்த சிவத்தான் மகன் ஏழுமலை (வயது 34 )என்பவரிடம் இரண்டு நாட்டு துப்பாக்கிகளும் இராமசாமி மகன் சீனிவாசன் (வயது 55) வெள்ளையன் மகன் பழனி( வயது 30) ஆகியோரை கைது செய்தனர்.