4-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

சென்னை

சென்னை, ஜூன் 28: சென்னையில் வரும் ஜீலை 4ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக வேலை வாய்ப்புத்துறை ஆணையர் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய முதன்மை செயல் அலுவலர் பா.ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வரும் ஜீலை 4 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கிண்டி மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்துறை மூலம்வேலைவாய்ப்பு ஏற்படுத்திட இம்முகாம் நடத்தப்படுகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20 க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. பொறியியல் பட்டப்படிப்பு. படித்துள்ள 21 வயது முதல் 40 வயது வரை உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

வேலைநாடுநர்கள் தங்கள் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் சுயவிவர குறிப்புடன்கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு அவசியமில்லை. இதற்கான பயணப்படிஏதும் வழங்கப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு தொலைபேசி (044– 22500134) தொடர்பு கொள்ளலாம்.