போக்குவரத்து விதிகள் குறித்து அதிகாரிகள் பயிற்சி

தமிழ்நாடு

திருச்சி, ஜூன் 28: திருச்சி மாநகரில் அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.
திருச்சி நகரில் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்டதற்கு மாறாக அதிக குழந்தைகளை பள்ளிகளுக்கு ஏற்றிச்செல்வதாக ஏராளமான புகார்கள் வந்தன.

இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.அதன் படி நடந்த சோதறனியல் முறைகளை விதிகளைமீறி அதிக அளவில் குழந்தைகள் மற்றும் பயணிகளை ஏற்றிச்சென்ற 58 ஆட்டோ டிரைவர்களுடன் போக்குவரத்து விதிகள் பற்றி பயிற்சி வகுப்பு நடத்தினர்.