சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் ரூ.6,757 கோடி

உலகம்

பெர்ன், ஜூன் 28: சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.6,757 கோடி என அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் ஏராளமான வெளிநாட்டினர் தங்கள் பணத்தை சேமித்து வருகின்றனர். சேமிப்பாளர்களின் பெயர் விவரங்களை வெளியிடாமல் பாதுகாத்து வரும் இந்த வங்கிகளில் ஏராளமான இந்தியர்களும் பல கோடி பணத்தை சேமித்து வைத்துள்ளனர்.

அதுகுறித்த புள்ளிவிவரப்படி, 2018-ம் ஆண்டில் அந்நாட்டு வங்கிகளில் இருந்த இந்தியர்களின் மொத்த சேமிப்பு தொகையின் மதிப்பு 955 மில்லியன் சுவிஸ் பிராங் (ரூ.6,757 கோடி) ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 6% குறைந்து உள்ளது. மேலும் இது கடந்த 1995-ம் ஆண்டுக்குப்பின் 2-வது மிகப்பெரிய சரிவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.