சென்னை, ஜூன் 28: சென்னையை சேர்ந்த ஷ்யாம் என்பவருக்கு பிரபல இணையதள தேடுப்பொறியான கூகுள் நிறுவனத்தில் ஆண்டிற்கு ரூ.60 லட்சம் சம்பளத்திற்கு வேலை கிடைத்துள்ளது.

பெங்களூரு ஐஐடியில் ஐஎம்.டெக் டிகிரியை ஐந்து வருடங்கள் படித்த ஷ்யாம், கடந்த ஜனவரி மாதம் கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்திருந்தார். தற்போது அவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதுகுறித்து ஷ்யாம் கூறுகையில், எனக்கு கூகுள் கிளவுட் பிரிவில் பணிபுரிய வேலை கிடைத்துள்ளது. எனது பணியை சிறப்பாக செய்வேன் என்று கூறியுள்ளார். ஷ்யாமின் தந்தை பாபு மத்திய அரசுப்பணியிலும், தாய் ஜெயஸ்ரீ தமிழக அரசு பணியிலும் பணியாற்றிவருகின்றனர். ஷ்யாமின் சகோதரர் சித்தார்த் அமெரிக்காவில் ஆய்வுப்படிப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். ஆண்ட்ராய்ட் எதிர்காலத்தை சரியாக ஊகித்து அதனை கூகுள் வசப்படுத்தி இன்று உலக அளவில் ஆண்ட்ராய்டை பிரபலமாக்கியவர் இவர்தான். இந்த நிலையில், மற்றொரு இளைஞர் கூகுள் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.