பர்மிங்காம், ஜூன் 29: உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

கடைசி இரு போட்டிகளில் அடைந்த தோல்வியால் இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வென்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும் இங்கிலாந்தின் தோல்வியை பாகிஸ்தான், வங்கதேச அணிகளும் எதிர்பார்த்துள்ளன.

அரையிறுதி வாய்ப்புக்கு இந்தியாவுக்கு இன்னும் ஒரு புள்ளியே தேவைப்பட்டாலும் இதுவரை தோற்காத அணி என்ற நிலையை தக்க வைப்பதுடன் முதல் இடத்தை பிடிக்கவும் இந்தியா முனைப்பு காட்டும்.