மோடியுடன் செல்பி எடுத்த ஆஸி. பிரதமர்

உலகம்

ஒசாகா, ஜூன் 29: பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் எடுத்துக் கொண்ட செல்பி படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், ஜப்பான் பிரதமர் அபே ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமரையும் அவர் சந்தித்தார். அப்போது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
பின்னர் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும் புகைப்படத்தோடு ‘மோடி எவ்வளவு சிறப்பான நபர்’ என்றும் பதிவிட்டுள்ளார்.