சென்னை, ஜூன் 29: மதுரவாயலில் சாலையை கடக்கமுயன்ற பெண் மீது, லாரி மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சேலத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 63). இவர், மதுரவாயலில உள்ள மகனை காண்பதற்காக சேலத்திலிருந்து பேருந்து மூலம் சென்னைக்கு இன்று காலை வந்துள்ளார்.

அப்போது, மதுரவாயல் ரேஷன் கடை பேருந்து நிறுத்தம் அருகே இன்று அதிகாலை 5.30 மணியளவில் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியதில், முத்துலட்சுமி தூக்கிவீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இது குறித்து, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் முரளிமோகன் என்பவரை கைது செய்தனர்.