ஸ்ரீநகர், ஜூன் 30: ஜம்மு காஷ்மீரின் புத்காம் என்ற பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவனை இன்று மத்திய ரிசர்வ் போசார் சுட்டுக் கொன்றனர்.
உளவு துறை அளித்த தகவலை தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீசார் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிகளால் சுட்டனர். இந்த மோதலில் ஒரு பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.