பர்மிங்காம், ஜூலை 1:  இங்கிலாந்திற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஒருவிக்கெட்டை கூட எடுக்காமல் 88 ரன்கள் விட்டுக்கொடுத்தார், இந்திய அணியின் பவுலர் யுஸ்வேந்திர சாஹல்.
இதன்மூலம், இப்போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர்கள் பட்டியலில் சாஹல் முதலிடத்தில் உள்ளார்.

மேலும், உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் அதிக ரன்களை கொடுத்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் சாஹல் முதல் இடத்தில் உள்ளார். முன்னதாக, 2003-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஸ்ரீநாத் ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் 87 ரன்கள் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.