முன்னாள் எம்எல்ஏ மறைவுக்கு இரங்கல்

சென்னை

சென்னை, ஜூலை 1: தமிழக சட்டசபை கடந்த மாதம்  28-ம் தேதி மீண்டும் கூடியது. அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.  மேலும், தற்போதைய சட்டசபையின் உறுப்பினர்களான கனகராஜ் (சூலூர்), ராதாமணி (விக்கிரவாண்டி) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின்னர் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. காலை 10 மணிக்கு சபை கூடியதும், முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.  குமாரதாஸ் விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கடைசியாக தமாகாவில் இருந்தார்.