க.சண்முகம் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்

சென்னை

சென்னை, ஜூலை 1: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக க.சண்முகம் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நிதித் துறை செயலாளராக இருந்த க.சண்முகம், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்த அவர், புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் நேற்று காலை சண்முகம் சந்தித்து வாழ்த்து பெற்றார். இன்று தலைமை செயலகத்திலும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.