சர்வதேச கராத்தே போட்டியில் ஆவடி மாணவர்கள் தங்கம்

சென்னை

அம்பத்தூர், ஜூலை 1: சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் ஆவடி நியூ எங் கோடோகான் கராத்தே டூ பவுண்டேஷன் மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்தனர். சிங்கப்பூரில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடை பெற்றது. இப்போட்டியில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் இந்தியா தமிழ்நாடு சென்னை ஆவடியில் அமைந்துள்ள நியூ எங் சோடோகான் கராத்தே டூ பவுன்டேசன் சார்பில் மாஸ்டர் டாக்டர் ராஜா, மாஸ்டர் சங்கீதா ஆகியோர் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் குமித்தே மற்றும் கட்டா பிரிவுகளில் கலந்து கொண்டு 14 தங்கம், 8 வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர். பின்னர் சாதனை படைத்த கராத்தே மாணவர்களை சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், சகமாணவர்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்தினர்.