சென்னை, ஜூலை 1: சென்னையில் நடைபெற்ற இரண்டு நாள் மருத்துவர்கள் கருத்தரங்கில் நீரிழிவு நோய் பற்றி விவாதிக்கப்பட்டது. போதிய விழிப்புணர்வு இன்மை காரணமாக இந்தியாவில் நீரிழிவு நோய் 5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இக்கூட்டத்தில் நீரிழிவு மருத்துவ விஞ்ஞான ஆலோசணை குழு உறுப்பினர் டாக்டர். வி.குமரவேல், சண்டிகர் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கே.கண்ணன், நீரிழிவு மற்றும் அதை சார்ந்த நோய்கள் தடுப்பு துறையின் தலைமை மருத்துவர் டாக்டா. அனில் பன்சாலி ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

டாக்டர்.வி. குமரவேல் மாநாட்டில் பேசுகையில், நமது உணவு பழக்கமே நோய்க்கான காரணிகளாக உள்ளது. அதனால் உணவு பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மருத்துவ விஞ்ஞான முறையில் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு டிரேன்டோ 2019 மாநாடு இந்தியா முழுவதிலும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

தற்போது ஆய்வு மேற்கொண்டதில் இந்தியாவில் 5 சதவீதம் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போதிய விழிப்புணர்வின்மையே இதற்கு காரணம் என்று கூறினார். இந்த மருத்துவர் மாநாட்டில் “மேனுவல் ஆப் கிளினிக்கல் எண்டோ கிரைனாலஜி” என்ற மருத்துவ நூலை டாக்டர். அனில் பன்சாலி வெளியிட்டார்.