சாலை விபத்தை தடுக்க ஓட்டுனருக்கு விழிப்புணர்வு

சென்னை

தாம்பரம், ஜூலை 1: தென் சென்னை மாவட்ட போக்குவரத்து சார்பில் தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பரங்கிமலை போக்குவரத்து டிப்பர் லாரி ஓட்டுனர்கள், தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கு வாகனங்களை சாலை விதிமுறைகளின் படி எப்படி ஓட்டவேண்டும், வேகமாகசெல்லக் கூடாது, பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் மிகவும் பொறுமையாக கவனத்துடன் ஓட்டவேண்டும் உள்ளிட்ட விபத்துகளை தடுப்பதற்கு உண்டான ஆலோசனைகளை வழங்கி, சாலை பாதுகாப்பு குறித்த துண்டுசீட்டுகளை வழங்கிவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பரங்கிமலை போக்குவரத்து உதவி ஆணையர் அன்வர்பாஷா, தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்த ஜோதி, உதவி ஆய்வாளர் ஜெயவேல் மற்றும்போக்குவரத்து போலீசார் கலந்துகொண்டனர்.