லண்டன், ஜூலை 2:  ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர்-கேன்டீஸ் தம்பதிக்கு நேற்று 3-ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் வார்னர் கலக்கிவரும் நிலையில், அவரது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக, 3-வது பெண்குழந்தைக்கு வார்னர் தந்தையாகியுள்ளார். லண்டனில் உள்ள மருத்துவமனையில் கேன்டீஸ் இந்த குழந்தையை பிரசவித்துள்ளார். வார்னர்-கேன்டீஸ் தம்பதிக்கு ஏற்கனவே, ஈவி மே மற்றும் இண்டி ரே என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

எங்கள் குடும்பத்தின் புதிய வரவான இஸ்லா ரோஸ் வார்னரை அன்புடன் வரவேற்கிறோம். தாயும், சேயும் சகோதரிகளும் சிறப்புடன் உள்ளனர், பெருமைக்குரிய தந்தையானேன் என்று டேவிட் வார்னர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் அதிரடி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்திவரும் டேவிட் வார்னர், நடப்பு தொடரில், 2 சதம், 3 அரைசதம் உட்பட 516 ரன்கள் குவித்து சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார், என்பது பாராட்டுதலுக்குரியது.