பர்மிங்காம், ஜூலை 2:  வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய உலகக்கோப்பை போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங் தேர்வுசெய்து விளையாடிவருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில், டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடிவருகிறது. இதுவரை கண்ணில் காட்டப்படாத தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை, நடப்புத் தொடரில் இன்றைய போட்டியில்தான் முதன்முறையாக களமிறக்கியுள்ளனர். இதன்மூலம், 4 விக்கெட் கீப்பர்களை கொண்டு இந்திய களமிறங்குகிறது. இதேபோல், காயம் காரணமாக ஓய்வில் இருந்த பவுலர் புவனேஸ்வர் குமாரும் இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறார்.