புதுச்சேரி.ஜூலை 2: காரைக்கால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கவேண்டும் என்று குறைதீர்ப்பு கூட்டத்தில் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

øபுதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் காமராஜர் மாநாட்டு வளாகத்தில் நடந்தது மாவட்ட கலெக்டர் விக்ரம் ராஜா தலைமை தாங்கினார் கூடுதல் வேளாண் இயக்குனர் அகமது நசீர் மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 73 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் தங்களுடைய கோரிக்கையாக காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு பிந்தைய மானியத்துடன் இடுபொருள் சேர்த்து அண்டை மாநிலமான தெலுங்கானாவில் வழங்குவதுபோல் ஏக்கர் ஒன்றுக்கு விவசாயிகளுக்கு பத்தாயிரம் மானியமாக வழங்க வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை பதிவுசெய்யவேண்டும். காரைக்கால் வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காரைக்காலில் ஐந்து ஏரிகளை தூர்வாரி பண்ணைகளை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்

. இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் விக்ரம் ராஜா காரைக்கால் முழுமையாக சர்வே செய்துள்ளோம் அதன்பிறகு பட்ஜெட்டுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.