சென்னை, ஜூலை 2: ஆசிர்வாதம் செய்வது போல் நடித்து பெண் அணிந்திருந்த மோதிரத்தை பறித்து சென்ற திருநங்கையை போலீசார் தேடிவருகின்றனர்.

சங்கீதா (வயது 30) என்பவர் பொருட்கள் வாங்கிக்கொண்டு சென்னை பாண்டிபஜார் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர், ஆசிர்வாதம் செய்வதுபோல் நடித்து சங்கீதா அணிந்திருந்த மோதிரத்தை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில், பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிந்து திருநங்கையை தேடிவருகின்றனர்.