திருவள்ளூர், ஜூலை 3: பிரதியுஷா பொறியியல் கல்லூரி- 15ஆவது பட்டமளிப்பு விழாவில் 579 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கடராமன் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பிரதியுஷா பொறியியல் கல்லூரியின் 15வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில், மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் 90% மாணவர்கள் பட்டம் பெற்று வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இக்கல்லூரியில் 2018 ஆம் கல்வியாண்டில் 6 மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தலைமை விருந்தினராக ஓய்வு பெற்ற மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதிகே. வெங்கடராமன் கலந்து கொண்டு மாணவர்களின் வாழ்க்கையில் முன்னேறவும் அறிவுறுத்தினார். முனைவர் பேராசிரியர் தாண்டவன் கூறுகையில், அவரது தொழில்நுட்பப் புரட்சியில் சாதிக்க முடியும் என்று மாணவர்களை ஊக்குவித்தார்.இக்கல்லூரியின் தாளாளர், ப. ராஜாராவ், மாணவர்கள் மேலும் வளர வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்தினார்.
முதன்மை நிர்வாக அதிகாரி ப. பிரத்யுஷா, சாய்ராம் வாசு மற்றும் டாக்டர்.பி.எல்.என்.ரமேஷ், முதல்வர் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினர்.. இந்த விழாவில் 579மாணவர்கள் பங்கேற்று பட்டங்களை பெற்றனர்.