சென்னை, ஜூலை 3: கணினி உதிரி பாகங்களை ரூ. 23 லட்சத்திற்கு வாங்கி கொண்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கம் புலியூர்புரம் பகுதியைச்சேர்ந்தவர் பிரபாகரன் (வயது29). இவர் அந்த பகுதியில் கணினி விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரிடம் பூந்தமல்லியைச்சேர்ந்த ஜான் மைக்கேல் (வயது33), அவரது மனைவி அபிராமி என்கிற சோபனா (வயது28) இருவரும் சேர்ந்து பிரபாகரிடம் தொழில் தொடங்க ரூ.2 கோடி வங்கியில் கடன் பெற்று தருவதாக ரூ.23 லட்சத்து 30ஆயிரத்துக்கு கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்களை வாங்கியுள்ளனர். ஆனால் லோன் வாங்கி தராமலும், பணம் தராமலும் ஏமாற்றி உள்ளனர் என்று பிரபாகரன் கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்து இருந்தார்.

பிரபாகர் அளித்து புகார் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணினி உதிரி பாகங்கள் வாங்கி கொண்டு ரூ.23 லட்சத்து 30 ஆயிரம் மோசடி செய்த தம்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.