பர்மிங்காம், ஜூலை 3: வங்கதேசத்திற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற பும்ராவின் அபார பந்துவீச்சு காரணம் என கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா நேற்று களமிறங்கியது. இந்த போட்டியில், இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், ஷமி, சாஹல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி கூறுகையில், வங்கதேச அணி இந்த தொடரில் அருமையாக விளையாடியுள்ளது. அவர்களுக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போட்டியில் நாங்கள் 30 ரன்கள் குறைவாக அடித்திருந்தோம். ஆனால் எங்களிடம் ஜஸ்பிரிட் பும்ரா என்ற ஒரு உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் இருக்கிறார். அவர் எங்களை காப்பாற்றி விட்டார் இந்த போட்டியில் நாங்கள் (இந்தியா) வெற்றிபெற காரணம் அவர்தான் என்றார்.