புதுடெல்லி, ஜூலை 3: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மன்மோகன்சிங் பதவிக்காலம் கடந்த மாதம் 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அசாமில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்எல்ஏக்கள் இல்லாததால் அவர் அங்கிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இல்லை.

தமிழகத்தில் 3 இடங்களுக்கு திமுகவும், மதிமுகவும் போட்டியிடுவதால் இங்கும் அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை.  இந்நிலையில், மதன் லால் சைனி எம்.பி. மறைவை அடுத்து ராஜஸ்தானில் ஒரு இடம் காலியாகி இருக்கிறது. எனவே ராஜஸ்தானில் இருந்து மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப் போவது என்பது தற்போது உறுதி ஆகி உள்ளது.