3 ஆயிரம் மாணவர்கள் சான்றிதழ் அனுப்பவில்லை

சென்னை

சென்னை, ஜூலை 3: மருத்துவ மாணவ தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதற்கு காரணம் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காதது என தெரியவந்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ மாணவ சேர்க்கைக்கு இந்த ஆண்டு ஜூன் 7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. ஜூன் 21-ம் தேதி வரை அனுமதிக்கப்பட்டது. விண்ணப்பித் மாணவர்களில் சுமார் 3 ஆயிரம் பேர் தேவையான ஆவணங்களை இந்த கெடு தேதிக்குள் கலந்தாய்வு கமிட்டிக்கு அனுப்ப தவறிவிட்டனர்.

இந்த மாணவர்கள் நீட் மதிப்பெண் பட்டியல், பிளஸ்டூ மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைனில் பதிவிட தவறிவிட்டது தெரியவந்துள்ளது.  இந்த மாணவர்கள் மேற்கண்ட ஆவணங்களை மீண்டும் அனுப்புமாறு வேண்டுகோள் அனுப்பப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து தேர்வு கமிட்டி செயலாளர் ஜி.செல்வராஜன் கூறுகையில், சான்றிதழ்களை தபாலில் அனுப்ப கால அவகாசம் இல்லை என்பதால் இ-மெயிலில் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினோம். பொரும்பாலான மாணவர்கள் அனுப்பிவிட்டனர் என்று கூறினார்.