பர்மிங்காம், ஜூலை 3: நேற்றைய உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி குவித்த ஸ்கோர்,  வங்கதேசத்திற்கு எதிராக இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

2011-ல் வங்கதேசத்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி 370 ரன்கள் குவித்தது. அதற்கு அடுத்தபடியாக, நேற்றைய போட்டியில் இந்திய அணி 314 ரன்கள் குவித்தது. இது, வங்கதேசத்திற்கு எதிராக இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். முன்னதாக, 2015-ல் மெல்போர்னில் நடந்த போட்டியில் இந்தியா 302 ரன்கள் குவித்ததே 2-வது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது, குறிப்பிடத்தக்கது.