சென்னை, ஜூலை 3: பட்டக்கத்தியால் கேக் வெட்டி கைதான ரவுடி பினு (வயது 52), ரெயில் பயணிகளிடம் கொள்ளையடித்து மலேஷியாவில் ஓட்டல் கட்டிய கேரளாவை சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 39) ஆகிய இருவரை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், போலீசார் கைதுசெய்து குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும், கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மதன் (வயது 47), அடிதடி வழக்கில் தொடர்புடைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆதிகேசவன் (வயது 34), வழிப்பறி, போக்சோவில் கைதான பாஸ் என்கிற மண்ட பாஸ்கர் (வயது 24) ஆகியோரும் குண்டாசில் கைதாகினர்.