எஸ்ஏசி இயக்கத்தில் ஜெய் நடிக்கும் ‘கேப்மாரி’

சினிமா

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி சென்னை 28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் ஜெய்.
மேலும் ஜெய் தற்போது பிரேக்கிங் நியூஸ் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஜெய்யின் 25-வது படமாக உருவாகி வருகிறது. அதேபோல் எஸ்ஏசிக்கும் இந்த படம் 70-வது படமாகும். இந்த படத்துடன் தன்னுடைய இயக்குனர் பொறுப்பை நிறுத்தப்போவதாக எஸ்ஏசி தெரிவித்துள்ளார். முன்பு இந்த படத்துக்கு ‘லவ் மேட்டர்’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. தற்போது படத்திய்கு கேப்மாரி என பெயர் வைத்துள்ளனர்.

இதில் தனது கேரக்டர் பெயரை விஜய் எனவைக்க வேண்டுமென எஸ்ஏசியிடம் கேட்டு வைத்துள்ளார் இதில் ஜெய்க்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா மற்றும் அதுல்யா நடிக்கிறார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் இசையமைக்க, ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார்.